நேரடி தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்!
‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. இப்படத்தை அட்லியின் உதவியாளர் சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து,சிவகார்த்திகேயன், தெலுங்கில் ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் -தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2022 ஜனவரி மாதம் 23 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என தெரிகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டரில் ‘உங்கள் அன்புக்கு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சத்யராஜ் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.