தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி அளித்து தயார்படுத்தும் என ரஜினிகாந்த் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கடந்த 14 ஆம் தேதி தெரிவித்தார். இந்த திட்டத்தை வழக்கறிஞர் எம்.சத்ய குமார் நிர்வகிப்பார் என்றும், ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான ரஜினிகாந்த் பவுண்டேசன்என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
“இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பதிவு செய்ய http://rajinikanthfoundation.