தமிழ்த்திரையுலகில் நீண்டகாலமாக காதல் ஜோடிகளாகவே சிறகடித்து பறந்து திரிந்து வரும் நடிகை நயன்தாரா,இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடியின் நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட நிலையில் இவர்களது திருமண அறிவிப்பை கோடம்பாக்க வட்டாரமே ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறது
ஒவ்வொரு புத்தாண்டையும் வெளிநாடுகளில் ஜாலியாக கொண்டாடி வரும் இந்த ஜோடி தற்போது புத்தாண்டை துபாயில் கொண்டாடி வருகின்றனர்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் யாரெல்லாம் 22-2 -22 தேதியில் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் அந்த தேதியை நான் வீணாக்க விரும்ப வில்லை… என பதிவிட்டுள்ளார்
இதையடுத்து இந்த தேதியில் தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது இதையடுத்து நயன் விக்கி ஜோடிக்கு நெட்டிசன்கள் பாரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா ஏற்கனவே நடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து, தூரதிர்ஷ்டவசமாக இருவரது காதலும் முறிந்து போனது குறிப்பிடத்தக்கது.