கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ என்ற தலைப்பில், ஒரு தனித்துவமான கதைக்கருவில் உருவாகும் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் ரகுமானுடன், அதர்வா முரளி முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
இப் படம் குறித்து தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி கூறியதாவது…
“நிறங்கள் மூன்று” எங்கள் நிறுவனத்தின் 25வது படைப்பாகும்.கார்த்திக் நரேன் திரைக்கதையை விவரித்தபோது, இந்தக் கதையின் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் கதை சொல்லிக்கொண்டிருகும்பொதே, இந்த பாத்திரங்களுக்கு யார் பொருத்தமானவர் என்று யோசிக்க ஆரம்பித்து, பல நடிகர்கள் பெயர் என் மனதில் ஓட ஆரம்பித்தது.
நான் நினைத்த நடிகர்களின் பெயரையே கார்த்திக் நரேனும் சொன்னது மிகவும் ஆச்சரியமான தருணம். அதர்வா முரளி, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் சிறந்த நடிகர்கள், அவர்கள் எப்போதும் அழுத்தமிகுந்த கதைகளிலும், வணிக ரீதியில் லாபம் தரும் படைப்புகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார்.
தனது முதல் அறிமுக திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. குறுகிய காலத்தில், திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து, அவர் தனது மகத்தான திறமையை நிரூபித்துள்ளார். “நிறங்கள் மூன்று” தனது இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.என்கிறார்.
“நிறங்கள் மூன்று” தலைப்பின் அர்த்தம் குறித்து கேட்டபோது..
இப்போதே தலைப்பை பற்றி கூறுவது அத்தனை நன்றாக இருக்காது, ஆனால் படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்பதற்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர், மேலும் வலுவான பாத்திரங்கள், சுவாரஸ்ய திரைக்கதை, எதிர்பாரா திருப்பங்களுடன் கார்த்திக் நரேனின் அழுத்தமான முத்திரை இப்படத்தில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.