“மாமனார் -மருமகனுடன் அந்த நடிகை ஜோடி போட்டவர் என்றால், நடிகையின் அம்மாவோ ,அந்த மாமனாருக்கே ஜோடியாக நடித்தவர்.ஆக அந்த நடிகை யார் என்பது தெரிகிறதா?”
க்விஸ் போட்டி நடத்துவது மாதிரி மன்னாரு கேட்டார்.
நான் முழித்தேன்.
“பரவாயில்லை.நானே கடைசியில் சொல்கிறேன்.இப்போது இதை காது கொடுத்து கவனமுடன் கேளு.”என்றார் மன்னாரு.
“அப்பாவுடன் மகளும் அந்த படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றிருந்தார்.தற்போதெல்லாம் அப்பாவுக்கு மகள்தான் பக்கதுணை .பாதுகாப்பு. வயதான அப்பாவை கவனித்துக் கொள்ள மகளை விட்டா வேறு யார் சரியாக இருப்பார்?படத்தின் ஹீரோயின் மகளுக்கு நெருக்கமானார். ஒரு வகையில் அந்த ஹீரோயின் அவருக்கு உறவுதான்.இசை அமைப்பாளர் அந்த ஹீரோயினுக்கு உறவு என்கிற போது மகளும் உறவுதானே !
நெருக்கம் இறுக்கமானது.
மகளின் கணவரைப்பற்றிய பேச்சு வந்தது. “எச்சரிக்கையாக இரு .அந்த மற்ற முன்னணி நடிகர்களைப்போல பிரபலமானவராக இருந்தாலும் இவர் மட்டும் ‘செக்ஸ் மேனியாக்’ மாதிரி நடந்து கொள்வார். நான் அவருக்கு ஹீரோயினாக நடித்தபோது அவரது கேரவானில்தான் தங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வார்.இது கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசப்பட்டதுதான்!மிகப்பெரிய நடிகரின் மருமகனைப்பற்றிய பேச்சு இது.!”என்கிறார் அந்த ஹீரோயின்.
இதைப்பற்றி மகளும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் விவாதித்தனர். அப்பா சொன்னார் “மகளே தைரியமாக முடிவு எடு.!அப்பாவுடைய இமேஜுக்கு ஏதேனும் வந்து விடுமோ என பயப்படாதே! எனக்கு ஒன்றும் ஆகாது”
இதன் பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.!”
இப்படி சொல்லிவிட்டு மன்னாரு காரில் பறந்து விட்டார்.
புரிகிறதா ?