
#ஜென்டில்மேன்2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.
இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார்கள்.
உலகமே கொண்டாடிய #பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் #M.M.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இப்பொழுது, பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் S.S.ராஜ்மௌலியின் #RRR படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத் தக்கது.
இந்த தங்க காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். சிலர் சரியான பதிலை பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் கோல்ட் காயின் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கபடும் என்றும் இப்படத்தின் டைரக்டர் யார் என்பதும் விரைவில் வெளியாகும் என்கிறது படக்குழு.