விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பு ஏன்?

புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை நடிகர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார்சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை சென்று அவரை சந்தித்து பேசியதன் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் நடக்கவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியானாலும் விஜய் மற்றும் ரங்கசாமி தரப்பில் இதுவரை அத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை.வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே அறிவிப்பு வெளியானது.

நடந்து முடிந்த கிராமபுற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு வார்டு உறுப்பினர்கள் உட்பட 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அதன் பொதுச்  செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார் இதையடுத்து தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் உள்ளாட்சி தேர்தல்நடந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை தற்போதைய சூழலில் ரங்கசாமி மற்றும் புதுவை பாஜக ஆகியோருக்கிடையே இணக்கமான சூழல் இல்லை என்கிறார்கள்.

இந்நிலையில் எதிர்காலத்தில் புதுவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் என்ஆர் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உருவானால் அதன் விளைவு எப்படி பட்டதாக இருக்கும் என்பது குறித்தும்பேசப்பட்டதாம்.அதே சமயம் புதுவையில் விஜய் கட்சி என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் புதுவையிலும் இப்போது இருந்தே விஜய் மக்கள் இயக்கத்தை முதல்வர் ரங்கா சாமியின் ஆதரவுடன் வலுப்படுத்தும் திட்டத்திலும் புஸ்ஸி ஆனந்த் செயல் பட திட்டமிட்டு காய் நகர்த்த தொடங்கி விட்டார் என்கிறார்கள்.