இந்தியாவின் ‘இசைக்குயில்’ என அழைக்கப்படும் பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர்(வயது 92) கொரோனா தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி ஆஸ்பத்திரியில்கடந்த ஜனவரி மாதம் 8 ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர் பிரதித் சம்தானி மற்றும் அவரது குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லதா மங்கேஷ்கர்உடல்நிலைக்குறித்து குறித்து டாக்டர் பிரதித் சம்தானி, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டது, ஆனால் இன்று மீண்டும் வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது, ஐசியுவில் அவர் கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனக்கூறியுளார் டாக்டர் பிரதித் சம்தானி,