தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் ” மனோகரி ” !
மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ” மனோகரி ” என்ற படத்தை தயாரிக்கிறார்.
இதில் முக்கிய வேடத்தில் கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், ஆண்டி இந்தியன் ஜெயராஜ் ,தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார்.
இப் படம் குறித்து இயக்குனர் நவாஸ் அகமது கூறியதாவது,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்திவி எப் எக்ஸ் காட்சிகள் நிறைந்த ‘மனோகரி’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம்.
இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கம்பத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை கே.வி.மணி கவனிக்க, கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.