எம்.கே. என்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது
இவ்விழாவினில்முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்டிக்கும் நிகழ்வினை செய்து காட்டினர்.
இதில் நடிகர் ராஜாஜி பேசியதாவது…
நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். MK Entertainment தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது அது இப்போது இல்லை என்பது வருத்தமே. பிஜு என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார் ஒண்ணுல்ல, இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார், படத்தில் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்தப்படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம் நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் என் நெருங்கிய நண்பர். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு தரமான படமாக இருக்கும் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. மிகச்சிறந்த படமாக இருக்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
இந்நிகழ்வில் இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் பேசியதாவது….”எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை ஈஸியாக செய்து தந்தார்கள், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது இந்தப்படத்தை சிக்கல்
இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. நாயகன் ராஜாஜி பேசுகையில்,அவரை தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார். தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன் ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் எனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். . பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார் இவ்வாறு அவர் பேசினார்