இந்தியாவே கொண்டாடிய இசைக்குயில் விண்ணில் பறந்து மறைந்து விட்டது.
ஆம், இவரது இசையில் மயங்கி ஆனந்த கண்ணீர் வடித்த பெருமகன் ஜவகர்லால் நேரு.
இவருக்காக குயிலை பிடித்து வந்து கரி சமைத்த நடிகர் திலகத்திடம் “குயிலா,அதையா கரி சமைத்திருக்கிறீர்கள் ?அண்ணா ,இனிமேல் குயிலை இறைச்சி பொருளாக்காதீர்கள்”என்று கண்ணீர் விட்டவர் உடன் பிறவா சகோதரி .
ஆம் ,இசைக்குயில் லதா மங்கேஷ்கர் இறந்து விட்டார் . இன்று காலை மும்பை ப்ரீச் காண்டி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. கொரானா கொள்ளை நோய் கொண்டு போய்விட்ட து ஒப்பற்ற பாடகியை.!வயது 92 மணமாகாதவர் .
எத்தனையோ கதாநாயகிகளின் புகழுக்கு காரணமாக இருந்தது லதா பாடிய இனிய பாடல்கள்தான்.!
இந்தியாவின் உயரிய விருதான பால்கே அவார்டு ,இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அடுத்து இரண்டாவதாக பாரத ரத்னா விருது பெற்றவர் லதா.
இந்தூர் பிறந்த இடம். 1929,செப்.28-ல் .தீனாநாத் மங்கேஷ்கர் ,செவந்தி என்கிற சுதாமதி தம்பதிக்கு மகளாக பிறந்தவர்.ஹேமா என பெற்றோர்களால் அழைக்கப்பட்டவர்.
இயக்குநர் வி.சாந்தாராமின் விருப்பத்திற்குரிய இசை அமைப்பாளர் வசந்த் தேசாயிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
மஜ்பூர் என்கிற படம்தான் இவருக்கு மிகப்பெரிய பிரேக் ஆக இருந்தது.
20 இந்திய மொழிகளில் 25,000 பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.
இசைஞானி இளையராஜாவின் இசையிலும் பாடி இருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ரகுமானின் இசையிலும் பாடி இருக்கிறார்.
சாதனையாளராக திகழ்ந்த லதாஜி இன்று நம்மிடம் இல்லை.தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு.