ரஜினியை இயக்கும் நெல்சன் திலீப்குமார்!அறிவிப்பு வெளியிட்ட சன் நிறுவனம்!!

’அண்ணாத்த’படத்தை தொடர்ந்து ரஜினியின்  அடுத்த படத்தை இயக்குவது யார்?  என்ற பட்டியலில்இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கே எஸ் ரவிக்குமார், நெல்சன்,பால்கி  உட்பட பலருடைய பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை அதாவது ’தலைவர் 169’ படத்தை நெல்சன் திலீப்குமார்இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சன்பிக்சர்ஸ் பட நிறுவனம் இன்று மாலை வீடியோ ஒன்றின் மூலம்  வெளியிட்டுள்ளது.

அனிருத் தான் இசையமைப்பாளர்.ரஜினியின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.