Friday, April 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம்!- சூர்யா.

admin by admin
March 2, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ஏப்ரல்-17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’!

கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ !

ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ (For Sale) டைட்டில் லுக் வெளியானது!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், ” இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு கூட்டு பிரார்த்தனை என் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்.
நான் திரையரங்கில் தான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். வெற்றி படமா.. தோல்வி படமா.. நல்ல படமா.. தரமான படமா.. என்பதை திரையரங்குகள் மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன். அதுவும் ரசிகர்கள் மூலமாகவே அதனை சந்தித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு பொருத்தமான படமாகத்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ தயாராகியிருக்கிறது.
ஏனைய படங்களின் படப்பிடிப்பு போலல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவிட் காரணமாக மறக்க முடியாததாக இருந்தது. வழக்கமான படப்பிடிப்பை போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதற்கு ஒத்துழைத்த படக்குழுவினருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும், படப்பிடிப்பு தளம் முழுவதும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து பிறகு வேலை செய்தனர். படப்பிடிப்பில் கலந்துகொண்ட கடைநிலை ஊழியர் முதல் அனைவருக்கும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முழு அக்கறையுடன் பேணி பாதுகாத்தனர். திருவிழா காட்சி படமாக்கும் போதும் இதனை முறையாக பின்பற்றினர்.
இந்தப்படத்தின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்காவிடம் ‘காக்க காக்க’ படத்தை பார்த்த போது உங்கள் வயது என்ன? எனக் கேட்டேன். அவர் ‘மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்’ என்றார். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய ரசிகையாக இருந்த பெண், தற்போது எனக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இழப்பதற்கு நாம் தயாராக இருந்தால், அடைவதற்கு ஏராளமாக இருக்கிறது. பழைய மூடநம்பிக்கைகளாக இருக்கலாம். பழகிக் கொண்ட வசதிகளாக இருக்கலாம். சௌகரியங்களாக இருக்கலாம். இது போன்றவற்றை இழக்கத் தயாராகி, புது முயற்சியுடன் பயணப்பட்டால் ஏராளமான இலக்குகளை அடையலாம். இழப்பதற்கு நீங்கள் தயாராக இருந்தால் அடைவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கிறது.
கோவிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகாலம் அனைத்தும் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. எல்லா விசயத்திலும் எல்லை தாண்டி சிந்திக்காதீர்கள். உங்கள் இதயம் என்ன சொல்கிறதோ..! அதை மட்டும் கேளுங்கள்.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ், நான் 2டி எனும் நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தவர். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கதை விவரிக்கும் முன்னர் என்னிடம், ‘உங்கள் ரசிகனாக இருந்து இப்படத்தை இயக்கவிருக்கிறேன்’ என சொன்னார். அப்போதுதான் அவருடைய மனதில் எந்த உயரத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சொல்கிறேன், ‘இந்தப் படம் எதற்கும் துணிந்த ரசிகர்களான உங்களுக்குத்தான். உங்களுக்காகத்தான்’. இந்தப்படத்தில் யாரும் பேசாத ஒரு விசயத்தை, பொறுப்புணர்வுடனும் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர்  பாண்டிராஜ்.
‘ஜெய்பீம்’ பட வெளியீட்டின்போது சில எதிர்பாராத சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெற்றது. சில தவறுகளும், சில தர்ம சங்கடங்களும் ஏற்பட்டன. அனைவரும் அனைத்து விசயங்களையும் புரிந்து கொண்டனர். ஆனால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் பல நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனை ரசிகர் மன்றத்தினர் மிகவும் பக்குவப்பட்ட மனநிலையில் கையாண்டனர். இதையும் நான் பார்த்தேன். இந்த இளம் வயதில் உங்களிடம் இருந்த பக்குவத்தை கண்டு நான் வியந்தேன். அதற்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10ஆம் தேதி முதல் மாற்றத்திற்கு தயாராக இருங்கள்.” என்றார்.
admin

admin

Related Posts

ஏப்ரல்-17ல் வெளியாகும்  ‘மிஸ்டர் எக்ஸ்’!
News

ஏப்ரல்-17ல் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’!

by admin
April 9, 2026
கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ !
News

கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ !

by admin
April 9, 2026
ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ (For Sale)  டைட்டில் லுக் வெளியானது!
News

ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ (For Sale) டைட்டில் லுக் வெளியானது!

by admin
April 9, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா!

by admin
April 8, 2026
அல்லு அர்ஜுன் -அட்லீ கூட்டணியில் உருவாகும், ‘ராக்கா’!
News

அல்லு அர்ஜுன் -அட்லீ கூட்டணியில் உருவாகும், ‘ராக்கா’!

by admin
April 8, 2026

Recent News

கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ !

கேபர் வாசுகியின் “ஃப்ராங்கிபானி” அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ !

April 9, 2026
ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ (For Sale)  டைட்டில் லுக் வெளியானது!

ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ (For Sale) டைட்டில் லுக் வெளியானது!

April 9, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா!

April 8, 2026
அல்லு அர்ஜுன் -அட்லீ கூட்டணியில் உருவாகும், ‘ராக்கா’!

அல்லு அர்ஜுன் -அட்லீ கூட்டணியில் உருவாகும், ‘ராக்கா’!

April 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?