அப்பா பஸ் யாத்ரா ,மகன் சைக்கிள் யாத்ரா !தேர்தல் கூத்து.!

ஆந்திர அரசியலில்  இப்போதுதான் சூடு பிடிக்காத தொடங்கியிருக்கிறது. எலக்சனுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.

இருந்தாலும் மக்களிடம் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெற ரெண்டு வருஷம் போதாதுப்பா என்கிறார் தெலுகு தேச பார்ட்டி தலைவர் சந்திரபாபு நாயுடு.!

கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். மவுனமாக இருந்திருக்கிறார்.சொந்தங்களே கை விட்டநிலையில் உடனிருந்தவர்கள் மட்டும் அருகில் இருப்பார்களா என்ன?

என்டிஆரின் பிள்ளைகளை நம்பி இனி அரசியல் பண்ண முடியாது என்பதை உணர்ந்த சந்திரபாபு நாயுடு இப்போது பஸ் யாத்ராவை தொடங்கி இருக்கிறார். விரைவில் தேர்தல் வரலாம் என்கிற ஜோதிடங்களும் இவரை நம்ப வைத்திருக்கிறது.

பாத யாத்திரை என்பதெல்லாம் பழசு.,பஸ்  யாத்ராதான் புதுசு.விடாதே ஆந்திராவின் மூலை  முடுக்கெல்லாம் பஸ்ச  விடு !என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் நாயுடு.ஆனால் இவரின் மகன் நர.லோகேஷ் பாதயாத்திரை என்கிற முடிவுக்கு வந்து கிளம்பி இருக்கிறார். மங்களகிரியில் மாநாடு நடத்தி பொலிட்பீரோவில் அங்கீகாரம் பெற்று இந்த யாத்திரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.படத்தில் அப்பாவை பஸ்ஸிலும் மகனை சைக்கிளிலும் பார்க்கலாம்.!