தமிழ்த்திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் காமெடி நடிகர் கணேஷ்.இவர் காமெடி நடிகை ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோடியாக தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகின்றனர். நடிகர் கணேஷ் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் பட்டினபாக்கம் ஒன்பதாவது பிளாக் எதிரில் உள்ள சாலையில் நடிகர் கணேஷ் தனது காரில் வேகமாக வந்துள்ளார். அப்போது பட்டினப்பாக்கம் ரோட்டில் உள்ள சாலை தடுப்பின் மீது வேகமாக சென்ற கார் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார் என்கிறார்கள். இதையடுத்து . காரில் வந்த நடிகர் கணேஷ் மற்றும் அவருடன் அங்கிருந்து நைசாக நழுவியதாக கூறப்படுகிறது.விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்’
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த நடிகர் கணேஷ் மது போதையில் இருந்ததாகவும் அவரை போலீசார் வலைவீசி தேடிவருவதக்கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன