நவரச நடிகர் கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், ஹரஹர மஹாதேவகி, IAMK, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் தற்போது தற்போது நடிகர் சிம்புவுடன் பத்து தல, மற்றும் செல்லப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தேவராட்டம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை மிகவும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்த தகவலை இருவரும் இதுவரை மறுக்க வில்லை. இந்நிலையில் இவர்களது காதலை உறுதிப்படுத்துவது போல்,நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மஞ்சிமா மோகனுக்கு கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது, ” ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் சந்தோசமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்’ என பதிவு செய்துள்ளார்.இதன் மூலம் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளார் கவுதம் கார்த்திக்.இதற்கு பதிலளிக்கும் விதமாக மஞ்சிமாமோகனும “மிக்க நன்றி ஜிகே” என்றுபதிவிட்டு , ஒரு இதய எமோஜி மற்றும் ப்ளஷ் ஒன்றையும் சேர்த்துள்ளார்.