மஹத் ராகவேந்திரா தற்போது ஈமோஜி எனும் வெப்தொடரில் நடித்துள்ளார். திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா? என்பதாக, அவர்களை சுற்றிய உணர்வுபூர்பமான ஒரு காதல் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது.
இந்த தொடர் சென்னை, தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இதில்,மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க,மானசா மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், V.J.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார்உள்பட பலர்
நடித்துள்ளனர்.
ஈமோஜி தொடரை Sen. S. ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், R.H.விக்ரம் இசையமைப்பாளராகவும், M.R.ரெஜீஷ் படத்தொகுப்பாளராகவும், சந்தியா சுப்பவரபு ஆடை வடிவமைப்பாளராகவும், N.சந்திரசேகர் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இருவர் ஒன்றானால் மற்றும் பொற்காலம் படங்களை தயாரித்த A.M. சம்பத் இந்த ஈமோஜி இணைய தொடரை தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக தீனா, ரமணா படங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகவும், அமீர்கான் நடித்த கஜினி படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.












