தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால்,சமீபத்தில் வெளியான ‘எஃப்ஐஆர்’,படத்தை தொடர்ந்து மோகன் தாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஷ்ணுவிஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி’ என்ற படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷணு விஷாலின் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்குகிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் வீரா என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா என விளையாட்டு கதைகளை மையப்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்த விஷ்ணு விஷால் மீண்டும் இந்த படத்தின் மூலம் ஸ்போர்ட்ஸ் ஜானர் பாதைக்கு திரும்பியுள்ளார்.