‘அடிதடி’, ‘மகா நடிகன்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘ குஸ்தி’, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “நாகா”. இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். ரெய்சா வில்சன் இன்னொரு கதா பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஶ்ரீகாந்த் இதில் தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார். .
மேலும், கருணாகரன், அறிமுகம் விஜய் நெல்லிஸ், மும்பை நடிகர் ரிகின் சாய்கல் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து அதன் இயக்குனர் சார்லஸ் கூறுகையில்,”நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து வந்து சங்காரம் செய்து அழித்து ஒழிப்பதே “நாகா” படத்தின் ஒன்லைன்.
புராணங்களில் சொல்லப் படுகிற நாகலோகம் இந்த காலத்திலேயும் உண்மையாக இருக்க தான் செய்கிறது என்பதை கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சியுடன் பிரமாண்டமாக சொல்ல வருகிறோம் ‘கடல் ஆழத்திலிருந்து வெளியே வரும் ஐந்து தலை ராட்சத நாகம்’, ‘உடலில் அணிகலன்களாகப் பாம்புகளையே அணிந்த மானஸாதேவி என்கிற நாக அம்மனின் மலைக்க வைக்கும் தோற்றம்’ என்று சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கத்தக்க பிரம்மாண்டமான விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதிஷ்குமார் கவனிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.