நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் நெய்ல் என்ற மகன் பிறந்துள்ளார். கர்ப்பமானதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வந்தார்.
இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.. இதையடுத்து தற்போது தன்னுடைய பிரசவத்திற்கு பிந்தைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி அவர் தனது மகன் நெய்ல் கிட்சுலுவை தன்னுடைய மார்புடன் அணைத்தபடியான புகைப்படத்தை வெளியிட்டு, தூய்மையான அன்பை தனக்கு தன்னுடைய மகன் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் தன்னுடைய இதயம் தனது உடலுக்கு வெளியில் இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாகவும், தன்னுடைய மகன் தன்னுடைய சிறிய இளவரசன் என்றும் காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.