கதாநாயகன் ‘வி’, லைஃப் கோச்சிங் வல்லுனர். மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்த்துவைப்பதில், குறிப்பாக தம்பதிகள் பிரச்சனைக்குதீர்வு காண்பதில் வல்லவர். நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமுமே மற்ற ஒருவரின் சூழ்ச்சிப்படியே நடக்கிறது. என்பதில் நம்பிக்கை உள்ளவர்.
தன்னுடைய தோழியின் பிரச்சனைக்கு தீர்வு தேடி ‘வி’ யிடம் வருகிறார் அனிக்கா விக்ரமன். இந்த சந்திப்பு ‘வி’ க்கும் அனிக்கா விக்ரமனுக்கும் இடையே காதலை ஏற்படுகிறது. உடனே அந்த காதலும் திருமணத்தில் முடிகிறது.
‘வி’யின் முன்னாள் காதலி சைத்ரா ரெட்டி நீண்ட நாளைக்குப் பிறகு அவரை சந்திக்கிறார். அப்போது சைத்ரா ரெட்டி திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது தெரிய வருகிறது. இருவரும் பழகி வருகிறார். இதனால் ‘வி’ யின் மனைவி அனிக்கா விக்ரமனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பினை டிவிஸ்டுகளோடு திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார், இயக்குனர், ‘வி’.
லைஃப் கோச்சிங் வல்லுனர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்,’வி’. அவருடன் இணைந்து நடித்த இரண்டு கதாநாயகிகளான அனிக்கா விக்ரமன், சைத்ரா ரெட்டி இருவருமே கதாபாத்திர தன்மை உணர்ந்து நடித்துள்ளனர். படத்தின் அநேக காட்சிகள் இந்த மூவரை சுற்றியே நடக்கிறது. நடிப்பதில் பெரிதாக குறை வைக்கவில்லை. ஆனால் இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடப்பதால், பார்த்து கொண்டிருப்பது தமிழ்ப்படமா என சந்தேகம் ஏற்படுகிறது.
அங்கங்கே சில இடங்களில் போரடித்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது சற்று சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. அதேபோல் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்!
தலைப்புக்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் பல படங்கள் இருக்கும். ஆணால் இந்தப்படத்தின் தலைப்பு மிகச்சரியாக இருக்கிறது.
விஷமக்காரன் – பொல்லாதவன்.