நாலு பேர் கூடும் இடங்களில் நாற்பது வீட்டு விஷயங்கள் அலசப்படும் .இது சாதாரண குடிமக்களுக்கும் ,மேட்டுக்குடி மக்களுக்கும் பொருந்தும். இரு சாராருமே இந்த விஷயத்தில் பொதுநோக்கு உள்ளவர்கள்.!
பங்களாவாசிகள் அலசியதில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரொம்பவே அடிபட்டு இருக்கிறார். முன்னாள் காதலரை மணந்து கொள்ளப்போவதாக கிண்டியிருக்கிறார்கள்.
தனுஷை காதலித்து கல்யாணம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு .யாத்ரா ,லிங்கா ,என இருமகன்கள்.வளர்ந்து ஆளாகிவிட்டார்கள். இந்த நிலையில் ஒரு துணையா ?
தங்களுடைய 18 ஆண்டு கால இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்தார்கள். இவர்களை இணைத்து வைக்கும் முயற்சி நடந்தது .முடியாமல் போய் விட்டது.
இப்போது, ஐஸ்வர்யா, முன்னாள் காதலர் ஒருவரை திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. குடும்பத்தில் பெரும் சர்ச்சை எழுந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை .விவாக ரத்துப் பெறாமல் மறுமணம் எப்படி நடக்கும்?
பங்களாவாசிகள் அலசினாலும் உண்மை என்ன என்பதை ரஜினியின் குடும்பம்தான் சொல்ல வேண்டும் .வதந்தியா ,உண்மையா என்பது எப்போது வெளியாகும்?