சமீபத்தில் நயன்-விக்கி ஜோடிக்கு வாடகை தாய் மூலமாக இரட் டைக் குழந்தை பிறந்துள்ளதை புகைப்படங்களுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.திருமணமான 4 மாதத்தில் இரட்டைக் குழந்தையா என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டவிதிகளை நயன்தாரா மீறிவிட்டார் என போலீசில் சிலர் புகார் கொடுக்கும் அளவுக்கு இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது..இதையடுத்து சுகாதார துறை அமைச்சர் வரை இவ்விவகாரம் மீடியாக்களால் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில் எங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு பதிவு திருமணம் நடந்து விட்டது மேலும் நாங்கள் கடந்த ஜனவரி மாதமே வாடகைத்தாய் மூலம் குழந்தை என்பதை பதிவு செய்து விட்டோம் என்றும் இருவரும் விளக்கமும் அளித்தனர்.இந்நிலையில்,தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் ட்ராக் பாண்ட் அணிந்திருக்கும் விக்னேஷ் சிவனின் மீது நனைந்துள்ளது. அதில் தனது குழந்தை தன் மீது அன்பை பொழிந்துள்ளதாக குறிப்பிட்டு, ஒரு அப்பாவாக கனவு நனவானதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது