வயாகாம் 18 மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அசோக் செல்வன், கொஞ்சம் ரிசர்வ்டு டைப். யாருடனும் அதிகம் பேசாமல், பழகமால் இருப்பவர். அவருக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த மணப்பெண் அஷோக் செல்வனை அதிகம் கவர்ந்து விடுகிறார். துரதிர்ஷடமாக மணப்பெண்ணால் அந்த திருமணம் நின்று விடுகிறது. இதனால் அஷோக் செல்வன் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.
இதனால், அஷோக் செல்வன் சிகிச்சைக்காக மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார்.
அபிராமி அவரிடம், வீரா – லட்சுமி மற்றும் பிரபா – மதிவதணி ஆகியோரின் வாழ்க்கையை எழுதியிருக்கும் டைரியை கொடுத்து, அவர்களை நேரில் சந்திக்கவும் சொல்கிறார். அஷோக் செல்வனும் அவர்களை தேடி செல்கிறார். அஷோக் செல்வன் அவர்களை சந்த்தித்தாரா? பழைய நிலைக்கு திரும்பினாரா? என்ன நடந்தது? என்பது தான் ‘நித்தம் ஒரு வானம்’.
நித்தம் ஒரு வானம் படத்தினில், அஷோக் செல்வன் மூன்றுவிதமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு தோற்றத்திலுமே சிறப்பாக நடித்திருக்கிறார். அமைதியாகவும், அதிரடியாகவும், காமெடியாகவும் சிறந்த நடிகராக நடிப்பில் தன்னை முன்னிறுத்தியிருக்கிறார்.
அஷோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ள ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என மூன்று நடிகைகளும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். இதில் அபர்ணா பாலமுரளி கூடுதலாக சிரிக்கவும் வைக்கிறார்.
இப்படத்தின் கதை ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்த கதை. என்பதால், சோர்வு ஏற்படுகிறது. திரைக்கதையும் மெதுவாக செல்கிறது. அதோடு நடு, நடுவே பாடல்களும் இடம் பெறுவதால் மேலும் சோர்வினை தருகிறது. அதே சமயம் திரைக்கதையில் ஏற்படும் சில திருப்பங்கள் பாராட்டும் படியிருக்கிறது.
விது அய்யனாவின் ஒளிப்பதிவு சிறப்பு. மூன்று விதமான கதைகளங்களுக்கும் வெவ்வேறான கலர்களில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் பலம்.
இசையமைத்திருக்கிறார், கோபி சுந்தர். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஆனால் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.
வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் மனபக்குவம் தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார், இயக்குனர் ரா.கார்த்திக்.