
மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளை,மற்றும் மூதாட்டிகளை அடையாளப்படுத்துகிற சொல். மாளிகப்புரத்து அம்மன் என்பது மதுரை மீனாட்சியை குறிக்கும்.
அய்யப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்கிற தணியாத பக்தி சிறுமி தேவநந்தாவுக்கு.!அழைத்துச்செல்வதாக சொன்ன தந்தை கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார். அய்யப்பனை தரிசனம் செய்ய முடியாமல் போகுமோ?
ஏதோ ஒரு உந்துதலில் சிநேகிதன் ஸ்ரீ பத் உடன் வீட்டுக்கு தெரியாமல் சபரிமலை செல்கிறாள் சிறுமி.வழியில் சந்திக்கும் இடர்கள்,அதிலிருந்து எப்படி தப்பித்து தரிசனம் செய்கிறார்கள் என்பது கதை.
சிறப்பான நடிப்பு சிறுமி தேவநந்தா .கலையான முகம் அழகு .இவருக்கு இணையாக வருகின்ற ஸ்ரீபத் சரியான சுட்டி.
நாயகன் உன்னி முகுந்தன் .இவர்தா அய்யப்பனாக வந்து உதவுகிறார் என்பது போல செல்லுகிறது திரைக்கதை.தெய்வீகக் களை .முகத்தில் .தேக கட்டு.முடிவில் யார் என்பது தெரியும்போது இயக்குநரின் திறமை பேசப்படும்.
நடிகர் சம்பத்ராம் வில்லன்.மிரட்டல்.
அய்யப்பன் சீசனில் வராமல் தற்போது வந்திருக்கிறது. சாமியே சரணம்.!












