பொன்னம்பலத்துக்கு நடந்த சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை!
கடந்த 2 வருடங்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு அவரது இரண்டாவது அக்கா மகனும், குறும்பட இயக்குனருமான ஜெகநாதன் (வயது 35) சிறுநீரக தானம் செய்ய முன்வந்ததையடுத்து, கடந்த 6 ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
அவருக்கு கடந்த 10 ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைவெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது அறுவைசிகிச்சைக்கு பின், உடல் நலம் தேறி வரும் நடிகர் பொன்னம்பலம் தனது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவிய .திரையுலக பிரபலங்களான நடிகர்கள் சிரஞ்சீவி ,சரத்குமார், தனுஷ் கமல்ஹாசன், அர்ஜுன்,விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபு தேவா,இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.