‘தாதா 87’, ‘பவுடர்’ படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் மையமாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிக்கிறார்இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் இப்படத்தில் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கிறார்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், பேங்க் ராஜேஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
.இப்படம் குறித்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கூறுகையில்,”தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் படும் கஷ்டங்களை குறித்து இந்த படம் பேசும்
இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை கொண்ட நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
சூரியன் மற்றும் சந்திரனுக்கு செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல இந்தியா வல்லரசு நாடாக முன்னேற இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த செலவில் உள்நாட்டிலியே தயாரிக்க வேண்டியதும் அவசியம் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு,இப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.” என்கிறார் விஜய் ஸ்ரீ