அர்ஜுன் இயக்கத்தில் மோகன்லால்!
மலையாளத்தில் சரித்திர படமாக வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்கம்’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து இருந்த அர்ஜுன்,நடிகர் மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் மார்ட்டின் பட விழாவில், கலந்து கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுனிடம், ‘நடிகர் மோகன்லாலை வைத்து ஒரு மாஸ் ஆக்சன் படம் இயக்குவீர்களா என்ற செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் அர்ஜுன் பதிலளிக்கையில்,
மோகன் லால் ஒரு மாஸ் கமர்சியல் ஹீரோ. அவரை வைத்து எனக்கும் ஒரு பான் இந்தியா ஆக்சன் படம் ஒன்றை இயக்கும் எண்ணம் உள்ளது .அவருக்காக நான் ஒரு கதை உருவாக்கி வருகிறேன் எல்லாம் நல்ல படியாக நடந்தால்,உங்கள் விருப்பம் நிறைவேறும் இவ்வாறு அவர் கூறினார்.