‘போதையற்ற தமிழ்நாடு’ முழக்கத்திற்கு ரஜினி ஆதரவு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்னும் முழக்கத்தினை முன் வைத்து ‘ஒரு கோடி கையெழுத்து இயக்கம்’ செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தினர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து, ‘போதையற்ற தமிழ்நாடு முழக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்து பெற்றுள்ளனர்
அப்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த சிறப்பான பணியை மேற்கொண்டுள்ள ‘ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து வழியனுப்பி வைத்துள்ளார்