லண்டனில் வருண்தவானுடன் சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்!!

ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘சிட்டாடல்’ வெப் தொடரின் சிறப்பு காட்சி நேற்று முன்தினம் மாலை லண்டனில் திரையிடப்பட்டது.

இந்த தொடரின் ஹிந்தி ரீமேக்கில் தற்போது சமந்தா நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமந்தா, ஒரு கருப்பு கோ-ஆர்ட் செட்டில், பல்கேரி நெக்பீஸ் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டார்.

இந்நிகழ்வில் நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானை இறுக்கி அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய நடிகை சமந்தாவின் இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியான ஒரு மணிநேரத்தில் 9 லட்சதுக்கும் மேலான லைக்குகளை
குவித்துள்ளது