224 உறுப்பினர்கள் அடங்கிய கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.பாஜக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறது..
இந்நிலையில், கர்நாடகாவின் கலபுரகி பகுதியில் யில் நடந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசும்போது, பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என நீங்களே யோசித்து பார்த்து கொள்ளலாம்.. நீங்கள் அதனை நக்கினால், மரணம் அடைந்து விடுவீர்கள் என்று பேசியுள்ளது பாஜக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இது பிரதமர் மோடிக்காக அல்ல, நான் சொன்னது பாஜகவின் சித்தாந்தம் ‘பாம்பு போன்றது’. பிரதமர் மோடிக்காக நான் தனிப்பட்ட முறையில் இதை ஒருபோதும் சொல்லவில்லை, அவர்களின் சித்தாந்தம் பாம்பு போன்றது, அதைத் தொட முயன்றால் உங்கள் மரணம் நிச்சயம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது முந்தைய விளக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
.மேலும் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,’எனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால், தவறாகக் கருதப்பட்டு, யாரையாவது மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தால், அதற்காக நான் சிறப்பு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்: என்றும் தெரிவித்துள்ளார்












