தமிழ் திரையுலகில் கடந்த 2012ம் ஆண்டு ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான 18 வயதுபடத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்திரி சங்கர் . தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.மேலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நடிகை காயத்ரி சங்கர் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரைப்படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வரும் அவர் கப்பலில் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு அதிரடியாக ‘பிகினி’ உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இப்புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள், என்ன மேடம் இதெல்லாம்? என்று வருத்தத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.












