தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.இவர் கடந்த மாதம்எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.அன்றிரவு சூளைமேட்டில் தன் நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, ரூ.2 லட்சம் மதிப்பில் ஐ போன் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, பார்ட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.:
நடிகையின் புகாரின் பேரில் அவரின் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு வந்த பார்சலில் ஐபோன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தான் சந்தேகப்பட்ட நபர் தான், தனது போனை திருடியதாகவும் எட்டு வருட நட்பு அர்த்தமற்றுப் போனதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில், நடிகை ஷாலு ஷம்முவை பழிவாங்கும் நோக்கத்தோடு அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் ஐபோனை திருடி, அந்த போனில் இருந்த சில ரகசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொண்டதாகவும் சில சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.