நடிகர் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய படம் “டெஸ்ட்”. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ள இப்படம் பான் இந்திய படமாக தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை, எஸ். சசிகாந்த் இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின் .இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் மாதவனுடன் திரையில் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது
மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து ஆயுத எழுத்து மற்றும் ரங் தே பசந்தி என்ற படத்தில் நடித்திருந்தனர். தற்போது 17 வருடங்கள் கழித்து இருவரும் ‘டெஸ்ட்’ படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.