கடந்த ‘ 1997-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’படத்தை தொடர்ந்து,நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தித்திரையுலகிற்கு திரும்பியுள்ளார்
சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், அஜய் தேவ்கன் மற்றும் ஆர் மாதவனுடன் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
விகாஸ் பாஹ்லின் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு .வரும் ஜூன் மாதம் முதல் மும்பை, முசோரி மற்றும் லண்டனில் நடக்க உள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் பேனரில் அஜய் தேவ்கன், குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
.இப்படத்தைப் பற்றிய மற்ற விவரங்களை, தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என தெரிகிறது