கடந்த 2016-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்துக்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பு தற்போது வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கும் கிடைத்து வரும் நிலையில், இப்படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி,இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில்,” பிச்சைக்காரன்1,2, படங்களைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ’பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், இரண்டாம் பாகம் போலவே மூன்றாம் பாகத்தையும் தானே இயக்க இருப்பதாகவும், அதில் முக்கிய வேடத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ’பிச்சைக்காரன் 3’ திரைப்படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.