‘கலைப்புலி’ எஸ் தாணுவுடன் இணையும் ‘கிச்சா சுதீப்’!

கலைப்புலி எஸ் தாணு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாகவும்,இது கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.இ

ந்த படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.