மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவினாலும், தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுக்களை குவித்தது.
அந்த வகையில் சாகுந்தலம் படம் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் அங்கீகரிக்கப்பட்டது. இது சமந்தாவுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.
இந்நிலையில்,விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் தேவார கொண்டாவுடனான நட்பு தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது என சமந்தா கூறி இருந்தார்.
இந்நிலையில் குஷி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஒரு ரெஸ்டாரண்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த வருடத்தில் பார்த்துவிட்டேன்.
ஆனால் வெகு சிலர்தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.












