கன்னடதிரையுலகின் மூத்த நடிகர் விஷ்ணுவர்தனின் மகனான நிதின் கோபி, ‘ஹலோ டாடி’ படத்தின் மூலம் கன்னட ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து முத்தினந்த ஹெந்தி, கேரளிடா கேசரி, நிஷப்தா, சிரபந்தவ்யா உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் நிதினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நிதின் கோபியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
39 வயதேயான நிதின் கோபியின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.