
முதன் முதலாக தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் ‘எல்ஜிஎம்’ படத்தை தோனி தயாரித்து வருகிறார்.லெட்ஸ் கெட் மேரீட் என்பதன் சுருக்கமே ‘எல்ஜிஎம்’ என்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. எல்.ஜி.எம் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக லவ் டுடே புகழ் இவானா நடித்து உள்ளார்.
இவர்களுடன் நதியா, பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஆர்.ஜே.விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இளைஞர்களை குறி வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக எல்.ஜி.எம் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.