உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப் படத்தின் டிரைலர் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. “நான் பாடிக்கொண்டு இருப்பது ஒரே பாடலாக இருக்கலாம், அதை நான் என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன்.என் வயிற்றில் இருந்து குடலை உருவி, அதை ஓரிழை யாழாக மாற்றி,அதை தெருத்தெருவாக மீட்டி வருவேன்.உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருப்பேன்”..
என்ற வசனத்துடன் வடிவேலுவின் குரலின் பின்னணியில் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் உதயநிதி வடிவேலு,மாரி செல்வராஜ் என்கிற புதிய கூட்டணியில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.