கிரீன் அமூசிமெண்ட் மற்றும் டி3 புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில், தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர். தயாரிக்கும் ‘ஈகை’ படத்தின் தொடக்க விழா படப்பிடிப்போடு சென்னையில் தொடங்கியது.
நடிகை அஞ்சலி கதை நாயகியாக நடிக்கும் இப்படம்,அவரது 50 வது படமாக உருவாகிறது.இப்படத்தில்,இயக்குனர் இமயம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் , காஷ்யப் பார்பயா உள்பட பலர் நடிக்கின்றனர்.
தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அசோக் வேலாயுதம்.கூறுகையில்,”இப்படம் சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது,
ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த “ஈகை” என்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரீதர், கவனிக்க, தரன்குமார் இசையமைக்கிறார்,