நடிகர் தனுஷ் தற்போது தமிழில் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.இதையடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் 50-வது திரைப்படத்தை அவரே நடித்து இயக்க உள்ளார்
இந்நிலையில், இப்படத்தில் தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும், சந்திப் கிஷானுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்,இப்படத்தில், விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் தனுஷ் ஜோடியாக நடித்த அமலாபால் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனாலும் இப்படத்தில் அமலாபாலும் தனுஷூக்கு ஜோடி இல்லை என்கிறார்கள்.எனவே இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.