நடிகை குஷ்பு,தற்போது பாஜக காட்சியிலும் தேசிய குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
சமீபத்தில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அவதூறாகப் பேசியதுடன் குஷ்பு பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசினார் என அவரை கண்டிக்கும் விதத்தில் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து திமுக,சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமில்லாமல் கைதும் செய்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இந்நிலையில்,coccyx bone பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, தனது டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.ஏற்கனவே முதுகு தண்டுவடப் பகுதிக்கு கீழ் மிகவும் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அதே பிரச்சனைக்காக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.