சங்கம் முக்கியமா…சாப்பாடு முக்கியமா? வைரலாக பரவும் நஸ்ரியா வீடியோ!

தமிழ்,மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை நஸ்ரியா,பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை தன்னுடைய 19 வது வயதில் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கும் சில காலம் முழுக்கு போட்டவர், தற்போது மீண்டும் மலையாளம் மற்றும் தெலுங்கில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக வலம்வரும் நஸ்ரியா. தன்து போட்டோஷுட் புகைப்படங்கள், கணவருடனான புகைப்படங்கள், விடுமுறை கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரெஸ்டாரெண்ட் ஒன்றில் தனியாளாக அமர்ந்து நான்வெஜ் அயிட்டங்களை வெளுத்துக்கட்டும் வீடியோவை நஸ்ரியா ‘சோறு தான் முக்கியம்’என்ற கேப்சனோடு பகிர்ந்துள்ளார்.

இதில் பர்கர், சிக்கன் 65, பிரெஞ்ச் பிரை என ஏராளமான அயிட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.இவை அனைத்தையும் எனக்கே எனக்காவென ‘நோ டயட்,நோ லிமிட்’ என ஒரு வெட்டு வெட்டுகிறார் .

குறிப்பாக சிக்கன் 65, பர்கர் இதை தொடர்ந்து லஸ்ஸி என அடுத்தடுத்து அனைத்தையும் மடமடவென உள்ளே தள்ளுகிறார்.

இதற்கிடையில், பிஸ்கெட்டுகள் போன்றவற்றையும் சாப்பிடுகிறார். அவர் விதவிதமான நான்வெஜ் ஐட்டங்களை வெளுத்துக் கட்டும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. .