நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடந்து வருகிறது.இப்படத்தில் ரஜினி, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர்
இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ள 52 வயதாகும் நிரோஷாவுக்கு இப்படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட வருடங்களுக்கு பின் நிறைவேறியுள்ளதாம்.
அதே போல அம்பிகா,ராதா சகோதரிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்ட ரஜினி, இப்படத்தின் மூலம் ராதிகாவின் சகோதரி நிரோஷாவுடனும் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது. லால்சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்,ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்திலும், மற்றும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.