ஜவான் இந்திய ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படுகிற இதுவரை அல்லாத அளவிற்கு மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்திய திரைப்படம் ஆகும், இந்தப் படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்,
ஷாருக்கான் முதல் தீபிகா படுகோன் , நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், மேலும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் முன்னோட்ட வீடியோ இன்று வெளியாகியுள்ளது.அதிரடி ஆக்ஷன் நிறைந்த முன்னோட்ட காட்சி, இப் படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது.
இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது , அட்லீ இதனை இயக்கியுள்ளார், கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்கள் .
இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.