‘ப்ராஜெக்ட் கே’ தீபிகா படுகோனின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியானது!
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சான் டியாகோ காமிக்-கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது ‘ப்ராஜெக்ட் கே’. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள்.
இயக்குநர் நாக் அஸ்வின் அறிவியல் புனைவு கதைக்கான நாடகத்தை எதிர்கொள்ளும் ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்காக ‘ப்ராஜெக்ட் கே:வை சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
2024 ஜனவரி 12-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தவும், அறிவியல் புனைவு கதை ஜானரை மறு வரையறை செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.