வெறிகொண்ட வேங்கையாய் சூர்யா… கங்குவா பர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!

 

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடித்து வருகின்றனர்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில்உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் வெளியானது .இந்நிலையில் தற்போது ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

போர்க்களத்தில் சூர்யா குதிரை மீது அமர்ந்து,எதிரிகளை வேட்டையாட, கையில் வாளேந்தி வெறிகொண்ட வேங்கையாய் சீறி பாய்ந்து செல்லும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.