Peacock Art House என்ற பட நிறுவனம் M. K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ” சமரா ” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.
’துருவங்கள் பதினாறு ’ படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும்
டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ள சார்லஸ் ஜோசப்.கூறுகையில்,”ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன்
அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.
விருவிருப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ரகுமான், பரத் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.இப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.என்கிறார். இப்படத்தின் வசனத்தை அனுஜ் வர்கீஸ்.எழுதியுள்ளார்.ஒளிப்பதிவை சினு சித்தார்த் கவனிக்க,
தீபக் வாரியர் இசையில், கோபி சுந்தர் பின்னணி இசையமைத்துள்ளார்.












